×

இந்தியாவில் புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் போக்கை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உரை

டெல்லி : இந்தியாவில் புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் போக்கை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தி உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டின் நீதிபதிகள் மத்தியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் புல்டோசர் நீதி என்று சில மாநிலங்களில் அதிகாரிகள் செயல்படுத்தி வந்த புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தது. இதனை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தடுத்து நிறுத்தியது.

ஏதேனும் குற்றம் நடந்தால் உடனடியாக அதிகாரிகள் புல்டோசர் மூலம் வீடுகளை இடித்து வந்தனர். சட்ட நடைமுறைகளை பொருட்படுத்தாமல் குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் இதற்கு தடை விதித்துள்ளது. அதிகாரிகள் ஒருபோதும் நீதிபதியாக முடியாது. வீடு என்பது குடிமக்களின் சமூக பொருளாதார உரிமை. சாதாரண மக்களுக்கு வீடு என்பது பல ஆண்டு கனவு, அது வெறும் சொத்து அல்ல ஒட்டு மொத்த குடும்பத்தின் உணர்வுகள், பாதுகாப்பு சம்பந்தப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியாவில் புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் போக்கை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உரை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,P. R. Kawaii ,Delhi ,Chief Justice ,P. R. Kawai ,Italy ,Chief Justice of the Supreme Court ,India ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு