×

மதத்தின் பெயரால் இந்தியாவில் பாஜக அரசியல் செய்வதை போல தமிழகத்திலும் செய்ய நினைக்கிறது: கே.எஸ்.அழகிரி பேட்டி

திருப்பூர்: மோடி அரசு உள்நாட்டு விஷயங்களை அறியாமல் வங்கதேசத்திற்கு வரிவிலக்கு அளித்ததால் ஜவுளித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு உற்பத்தி குறைவதால் ஜி.டி.பி குறைகிறது. என திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கையால் திருப்பூர் பெருமளவு பாதித்துள்ளது. வங்க தேசத்தில் வரிக்குறைப்பு வழங்கி உள்ளதால் அவர்களால் குறைவான விலையில் ஆடை வழங்க முடிகிறது. வங்கதேசத்தில் இருந்து 4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது. 12.6 சதவீதம் காங்கிரஸ் ஆட்சியில் வரி விதிக்கப்பட்டது , அதனால் வங்க தேச துணிகள் வரவில்லை. ஆனால் பாஜக வரிவிதிக்காததால் வங்க தேச துணிகள் வருகின்றன. ஒன்றிய அரசு இதனை சரி செய்ய வேண்டும். இதனால் இந்திய ஆடைகள் உற்பத்தி பாதிக்கப்படும். மோடி அரசு உள்நாட்டு விஷயங்களை அறியாமல் வங்கதேசத்திற்கு வரிவிலக்கு அளித்ததால் ஜவுளித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய அரசு சரி செய்ய வேண்டும்.

சீனாவில் இருந்து வருகிற பாலிஸ்டராலும் பிரச்சனை, பாலிஸ்டர் இங்கு அதிகளவில் கிடைப்பதில்லை. அதனை உற்பத்தி செய்பவர்கள் அதானி அம்பானி , வேறு யாருக்கும் உற்பத்தி வாய்ப்பு இல்லை இதனால் பாலிஸ்டரால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டுகின்றனர். இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தி குறைவதால் ஜி.டி.பி குறைகிறது. சீனாவில் இருந்து வரும் பாலியஸ்டர் துணி விலை மலிவாக உள்ளது. சினாவிற்கு இணையான தொழில்நுட்பம் தேவை. அதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். விவசாயத்திற்கு அடுத்த படியாக , நெசவு தொழிலை அதிகமானோர் சார்ந்துள்ளனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் பாதிப்படைந்துள்ளனர் சரி செய்ய வேண்டும்

நிர்மலா சீதாராமன் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் அரசிடம் இருந்து கோவில்கள் மீட்க வேண்டும் என சொல்கிறார். சுதந்திரத்திற்கு முன்பே இந்து சமய அறநிலையத் துறை அரசிடம் தான் உள்ளது. மன்னர்கள் காலத்தில் கூட கோவில் நிர்வாகம் மன்னர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆதிக்க மனிதர்கள் கோவிலுக்குள் சென்றுவிட்டால் பிறர் சென்று கோவிலில் வழிபட முடியாது. எனவே கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது.

சேகர்பாபு திமுகவை சேர்ந்தவராக இருக்கலாம் ஆனாலும் அவர் ஏற்றுக்கொண்ட பொருப்பை திறம்பட செய்கிறார். ரூ.5 ஆயிரம் கோடி கோவில் சொத்துக்களை மீட்டுள்ளார். இதனை பாராட்ட வேண்டாமா? மதத்தின் பெயரால் இந்தியாவில் பாஜக அரசியல் செய்வதை போல தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார் என அவர் கூறினார்.

தொடர்ந்து, வடமாநிலங்களில் உள்ள கோவில்களை விட தமிழகத்தில் உள்ள கோவில்களில் தீண்டாமையை பார்ப்பதாக ஆளுநர் தெரிவித்த கருத்து குறித்து பேசிய அழகிரி ஆளுநருக்கு மாலைக்கண் நோய். என விமர்சித்தார். காவிரியை வைத்து கர்நாடகா பாஜக தமிழக பாஜக அரசியல் செய்கிறார் என கூறினார்.

The post மதத்தின் பெயரால் இந்தியாவில் பாஜக அரசியல் செய்வதை போல தமிழகத்திலும் செய்ய நினைக்கிறது: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,KS Azhagiri ,Tirupur ,Modi government ,Bangladesh ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது