×

சுதந்திரதின விழாவை முன்னிட்டு பொன்னமராவதி ஒன்றியத்தில் மரக்கன்று நடப்பட்டன

பொன்னமராவதி: பொன்னமராவதி ஒன்றியத்தில் சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் பணியாளர்கள் மூலம் வரும் 15ம் தேதி சுதந்திர தின பெருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள 42கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்திரவிட்டிருந்தார்.

இதனையடுத்து பொன்னமராவதி ஒன்றியத்தில் செவலூர், கோவணூர், செம்பூதி, சுந்தரம், கண்டியாநத்தம், இடையாத்தூர், கொன்னையம்பட்டி, வேந்தன்பட்டி, ஏனாதி, நல்லூர், வேகுப்பட்டி, மேலமேலநிலை உட்பட 42 கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஒன்றிய ஆணையர்கள் கருணாகரன், வீரையன் ஆகியோர் பல்வேறு ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், பணித்தள பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சுதந்திரதின விழாவை முன்னிட்டு பொன்னமராவதி ஒன்றியத்தில் மரக்கன்று நடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati Union ,Independence Day ,Ponnamaravati ,Dinakaran ,
× RELATED சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது