×

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: இ.கம்யூனிஸ்ட் தொகுதி மாநாட்டில் தீர்மானம்

திருப்போரூர்: திருப்போரூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி மா நாட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மாநாடு நேற்று திருப்போரூரில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை கந்தசாமி ஏற்றினார். பிரபு வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் முனுசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் மோ.வெங்கடேசன், தொகுதி துணை செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ெஜகதீசன் நிறைவுரையாற்றினார். இந்த மாநாட்டில் 19 பேர் கொண்ட புதிய சட்டமன்ற தொகுதி குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் புதிய செயலாளராக பார்த்தீபன், துணை செயலாளர்களாக ஆதிமூலம், முனுசாமி, பொருளாளராக ஹாரூண்பாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், குன்னப்பட்டு ஜப்பான் சிட்டி, ஆலத்தூர் சிட்கோ, சிறுசேரி சிப்காட், மாம்பாக்கம், புதுப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு மு ன்னுரிமை அடிப்படையில் வேலை வாங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

The post உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: இ.கம்யூனிஸ்ட் தொகுதி மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : in ,E.Communist constituency conference ,Thiruporur ,Communist Party of India ,CPI ,Thiruporur Legislative Assembly Constituency Conference ,Kandasamy… ,Resolution in E.Communist constituency conference ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...