×
Saravana Stores

ஐசிசி டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்: முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா மோதல்; 20 அணிகள் பங்கேற்பு

டாலஸ்: ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் 9வது உலக கோப்பை தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்காவின் டாலஸ் நகரில் காலை 6.00 மணிக்கு தொடங்கி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இத்தொடரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முதல் சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட மொத்தம் 20 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் (ஜூன் 2-17) மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு (ஜூன் 19-24) முன்னேறும்.

சூப்பர் 8 சுற்றின் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 26, 27 தேதிகளில் டிரினிடாட் மற்றும் கயானாவில் நடக்கும். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனல் ஜூன் 29ம் தேதி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ், பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும். ஏ பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா அணிகள் இன்று மோதுகின்றன. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது.

பிரிவுகள்
பிரிவு ஏ: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
பிரிவு பி: ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன், இங்கிலாந்து
பிரிவு சி: உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்
பிரிவு டி: இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம், தென் ஆப்ரிக்கா

* இதுவரை நடந்த 8 உலக கோப்பையிலும் விளையாடிய அணிகள்: இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம்.
* இவை தவிர அயர்லாந்து 7, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே தலா 6, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து தலா 5, நமீபியா, ஓமன், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் தலா 2 முறை, நேபாளம், கென்யா, பப்புவா நியூ கினியா தலா ஒருமுறை உலக கோப்பையில் களம் கண்டுள்ளன.
* அமெரிக்கா, கனடா, உகாண்டா அணிகள் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட இருக்கின்றன.
* விராத் கோஹ்லி 2012 முதல் 2022 வரையிலான உலக கோப்பைகளில் விளையாடி அதிகபட்சமாக 1141 ரன் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு தொடரில் அதிக ரன் (319) குவித்த வீரராகவும் கோஹ்லி சாதனை படைத்துள்ளார்.
* 2007 – 2022 வரையிலான உலக கோப்பைகளில் விளையாடி உள்ள ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) மொத்தம் 47 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
* அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் (2 சதம்), அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் கோஹ்லி (14) முதல் இடத்தில் உள்ளனர்.
* இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் அதிக ஆட்டங்களில் வென்ற அணியாக இந்தியா உள்ளது. இந்தியா 44 ஆட்டங்களில் 27 வெற்றி, 15 தோல்வி என 63.95 சதவீத வெற்றியை பெற்றுள்ளது.
* வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 2012ம் ஆண்டு நியூசி. வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 123 ரன் விளாசியதே அதிகபட்ச ரன்னாகும்.
* அதிவேக அரை சதம் அடித்த வீரராக இந்தியாவின் யுவராஜ் சிங் (12 பந்து) முதலிடம் வகிக்கிறார். இவர் நடப்பு தொடரின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லீக் சுற்று அட்டவணை
தேதி பிரிவு மோதும் அணிகள் களம் தொடக்கம்
ஜூன் 2 ஏ அமெரிக்கா-கனடா டாலஸ் காலை 6.00
ஜூன் 2 சி வெ. இண்டீஸ்-நியூ கினியா புராவிடன்ஸ் இரவு 8.00
ஜூன் 3 பி நமீபியா-ஓமன் பிரிட்ஜ்டவுன் காலை 6.00
ஜூன் 3 டி இலங்கை-தென் ஆப்ரிக்கா நியூயார்க் இரவு 8.00
ஜூன் 4 சி ஆப்கான்-உகாண்டா புராவிடன்ஸ் காலை 6.00
ஜூன் 4 பி இங்கிலாந்து-ஸ்காட்லாந்து பிரிட்ஜ்டவுன் இரவு 8.00
ஜூன் 4 டி நெதர்லாந்து-நேபாளம் டாலஸ் இரவு 9.00
ஜூன் 5 ஏ இந்தியா-அயர்லாந்து நியூயார்க் இரவு 8.00
ஜூன் 6 சி நியூ கினியா-உகாண்டா புராவிடன்ஸ் காலை 5.00
ஜூன் 6 பி ஆஸ்திரேலியா-ஓமன் பிரிட்ஜ்டவுன் காலை 6.00
ஜூன் 6 ஏ அமெரிக்கா-பாகிஸ்தான் டாலஸ் இரவு 9.00
ஜூன் 7 பி நமீபியா-ஸ்காட்லாந்து பிரிட்ஜ்டவுன் அதிகாலை 00.30
ஜூன் 7 ஏ கனடா-அயர்லாந்து நியூயார்க் இரவு 8.00
ஜூன் 8 சி ஆப்கான்-நியூசிலாந்து புராவிடன்ஸ் காலை 5.00
ஜூன் 8 டி வங்கதேசம்-இலங்கை டாலஸ் காலை 6.00
ஜூன் 8 டி நெதர்லாந்து-தென் ஆப்ரிக்கா நியூயார்க் இரவு 8.00
ஜூன் 8 பி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து பிரிட்ஜ்டவுன் இரவு 10.30
ஜூன் 9 சி வெ. இண்டீஸ்-உகாண்டா புராவிடன்ஸ் காலை 6.00
ஜூன் 9 ஏ இந்தியா-பாகிஸ்தான் நியூயார்க் இரவு 8.00
ஜூன் 9 பி ஓமன்-ஸ்காட்லாந்து நார்த் சவுண்ட் இரவு 10.30
ஜூன் 10 டி வங்கதேசம்-தென் ஆப்ரிக்கா நியூயார்க் இரவு 8.00
ஜூன் 11 ஏ கனடா-பாகிஸ்தான் நியூயார்க் இரவு 8.00
ஜூன் 12 டி நேபாளம்-இலங்கை லாடர்ஹில் காலை 5.00
ஜூன் 12 பி ஆஸ்திரேலியா-நமீபியா நார்த் சவுண்ட் காலை 6.00
ஜூன் 12 ஏ அமெரிக்கா-இந்தியா நியூயார்க் இரவு 8.00
ஜூன் 13 சி வெ. இண்டீஸ்-நியூசிலாந்து டரூபா காலை 6.00
ஜூன் 13 பி வங்கதேசம்-நெதர்லாந்து கிங்ஸ்டவுன் இரவு 8.00
ஜூன் 14 டி இங்கிலாந்து-ஓமன் நார்த் சவுண்ட் அதிகாலை 00.30
ஜூன் 14 சி ஆப்கான்-நியூ கினியா டரூபா காலை 6.00
ஜூன் 14 ஏ அமெரிக்கா-அயர்லாந்து லாடர்ஹில் இரவு 8.00
ஜூன் 15 டி நேபாளம்-தென் ஆப்ரிக்கா கிங்ஸ்டவுன் காலை 5.00
ஜூன் 15 சி நியூசிலாந்து-உகாண்டா டரூபா காலை 6.00
ஜூன் 15 ஏ கனடா-இந்தியா லாடர்ஹில் இரவு 8.00
ஜூன் 15 பி இங்கிலாந்து-நமீபியா நார்த் சவுண்ட் இரவு 10.30
ஜூன் 16 பி ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து கிராஸ் ஐலெட் காலை 6.00
ஜூன் 16 ஏ அயர்லாந்து-பாகிஸ்தான் லாடர்ஹில் இரவு 8.00
ஜூன் 17 டி வங்கதேசம்-நேபாளம் கிங்ஸ்டவுன் காலை 5.00
ஜூன் 17 டி நெதர்லாந்து-இலங்கை கிராஸ் ஐலெட் காலை 6.00
ஜூன் 17 சி நியூசிலாந்து-நியூ கினியா டரூபா இரவு 8.00
ஜூன் 18 சி வெ. இண்டீஸ்-ஆப்கான் கிராஸ் ஐலெட் காலை 6.00

இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு சாம்பியன் 2வது இடம்
2007 இந்தியா பாகிஸ்தான்
2009 பாகிஸ்தான் இலங்கை
2010 இங்கிலாந்து ஆஸ்திரேலியா
2012 வெஸ்ட் இண்டீஸ் இலங்கை
2014 இலங்கை இந்தியா
2016 வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து
2021 ஆஸ்திரேலியா நியூசிலாந்து
2022 இங்கிலாந்து பாகிஸ்தான்

The post ஐசிசி டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்: முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா மோதல்; 20 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : ICC T20 World Cup ,USA ,Canada ,Dallas ,ICC Men's T20 Cricket World Cup ,Dallas, USA ,Dinakaran ,
× RELATED கனடாவின் பிராம்ப்டனில் கோயில் மீது...