×

வீட்டை இடிக்காமல் நகர்த்தும் தொழில்நுட்பம் அறிமுகம்

திருப்பூர்: திருப்பூர் பாளையக்காடு பகுதியில் முதன் முதலாக வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் ஹைட்ராலிக் சிப்டிங் என்கிற உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக்கி பயன்படுத்தி கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து நகர்த்தும் செயல் முறையின் படி 2 பெட்ரூம் உள்ள கட்டிடத்தை 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்த 2 பெட்ரூம் கொண்ட வீட்டு கட்டடம் நகர்த்தும் பணியில் இதற்கென பிரத்தியேகமாகப் பணி புரியும் கட்டுமான வல்லுனர்கள், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

முதன்முதலாக இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை நகர்த்துவதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் பழைய தூண்களானது அடித்தளத்தில் அறுக்கப்பட்டு புதிய அடித்தளத்தின் புதுத் தூண்களுடன் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு ஜல்லி கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்படுகின்றது.

அதன் பின்னர் ஒரு நாள் ஒன்றுக்கு 8 அடி வீதம், 3 நாட்களுக்கு 24 அடி தூரம் நகர்த்த படுகிறது. இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு, கோவில்கள், 5 மாடி கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் நகர்த்தியும், உயர்த்தியும் விடலாம் என்றும், புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் இது போன்று தொழில் நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என நிறுவன உரிமையாளர் பொன்லிங்கம் தெரிவித்தார்.

The post வீட்டை இடிக்காமல் நகர்த்தும் தொழில்நுட்பம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Palayakkadu ,Dinakaran ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது