- இமாச்சல் காங்
- மோடி
- பிரியங்கா காந்தி
- சிம்லா
- காங்கிரஸ்
- ஆனந்த் சர்மா
- ஹிமாச்சல பிரதேசம்
- கங்க்ரா லோக்சபா
- பொதுச்செயலர்
- தேவன்
- இமாச்சல் கும்பம்
- தின மலர்
சிம்லா: இமாச்சல பிரதேசம் கங்க்ரா மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் சர்மாவை ஆதரித்து நேற்று பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி,‘‘பிரதமர் மோடி கடவுள் பெயரை பயன்படுத்தி மக்களிடம் தவறான பிரசாரம் செய்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றார். கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மாநில அரசியலில் பெரும் குழப்பம் நிலவியது.
இதில் ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.100 கோடி வரை பாஜவினர் லஞ்சம் கொடுக்க முன்வந்தனர். பண பலத்தை வைத்து கொண்டு மாநில அரசை கவிழ்க்க பிரதமர் மோடி முயற்சித்தார். கடந்த 2 ஆண்டுகளில் இமாச்சலில் இரண்டு பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தன.ஒன்று இயற்கை பேரழிவு. இன்னொன்று மாநில அரசை கவிழ்ப்பதற்கு நடந்த சதி செயல்.
இயற்கை பேரழிவு ஏற்பட்ட போது, காங்கிரசின் தொண்டர் முதல் அமைச்சர்கள் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் பாஜவினர் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வேடிக்கை பார்த்தனர். பேரழிவு நிதியை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. இமாச்சல் பிரதேசம் என்னுடைய 2வது வீடு என்று சொல்லும் மோடி இயற்கை பேரழிவு ஏற்பட்ட போது மாநிலத்தை வந்து பார்க்க கூட வரவில்லை. இது தான் பாஜ வின் உண்மையான முகம் ஆகும்’’ என்றார்.
The post இமாச்சல் காங். அரசை கவிழ்க்க மோடி முயற்சித்தார்: பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.