×

25000 கிமீ தூர, நெடுஞ்சாலைகள் 4 வழி சாலையாக மாற்றப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

ராஞ்சி: ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டி:
இந்தியாவில் போக்குவரத்து துறை மிக பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல், பசுமை இயக்கத்தை அதிகரிப்பது முதல் ஏஐ-உந்துதல் பெற்ற பாதுகாப்பு கருவிகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள முயற்சிகளை அறிமுகப்படுத்துவது வரை, ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது.
25,000 கி.மீ இருவழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு, 2013-14 ம் ஆண்டில் 91,287 கி.மீ.யிலிருந்து இன்று 1.46 லட்சம் கி.மீ.க்கு மேல் அதிகரித்துள்ளது.இது 60% அதிகரிப்பைக் குறிக்கிறது. தேசிய அதிவேக வழித்தடங்கள் 2014ல் வெறும் 93 கி.மீ.யிலிருந்து இப்போது 2,474 கி.மீ.க்கு விரிவடைந்துள்ளன.

இந்தியாவில் போக்கு
வரத்து முறைகளை மாற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மின்சார விரைவு போக்குவரத்து,நகர்புறங்களில் ஹைப்பர்லூப் ரயில், அணுக முடியாத மலை பாங்கான பகுதிகளில் ரோப் கார்கள், கேபிள் பஸ்கள் மற்றும் இழுவை ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

The post 25000 கிமீ தூர, நெடுஞ்சாலைகள் 4 வழி சாலையாக மாற்றப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Gadkari ,Ranchi ,Union Minister of Road Transport and Highways ,India ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு