×

ஹீரோ பேஷன் பிளஸ்

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஸ்பிளண்டர் பிளஸ் மற்றும் பேஷன் பிளஸ் ஆகிய இரண்டுமே பிரபலமானவை. ஆனால், 2019ம் ஆண்டுக்குப் பிறகு பேஷன் பிளஸ் பைக் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த பைக் தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அறிமுகத்தின் மூலம், இந்த நிறுவனத்தின் 100 சிசி பைக் வரிசையில் 5வதாக இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7.9 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

4 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் தெரிவிக்கக் கூடிய தொழில்நுட்பமும் இதில் உள்ளது. இதுதவிர, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் இன்ஜின் இயங்காது. ஹீரோ நிறுவனத்தின் பிரத்யேகமான ஐ3எஸ் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. தோற்றத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஷோரூம் விலையாக சுமார் ரூ.76,301 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஹீரோ பேஷன் பிளஸ் appeared first on Dinakaran.

Tags : Hero Motor Corporation ,
× RELATED ஹீரோ மோட்டார்சின் ‘விடா’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்