×

உடல் எடையைப் பராமரிக்க உதவும் உலர் பழங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலர் பழங்கள்!

இன்றைய உணவு பழக்கவழக்கங்களாலும் வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் பெரும்பாலானவர் சந்திக்கும் பிரச்னை உடல் பருமன். பலரும் உடல் பருமனை குறைக்க பலவிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அந்த உடற்பயிற்சிகளுடன் சரியான உணவு பழக்கத்தையும் கையாண்டல் நிச்சயம் உடற்பருமனை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி நொறுக்குத்தீனிகளுக்கு மாற்றாக உலர்பழங்களை உட்கொண்டு வந்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். உடலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சேர்வதை தடுக்கும் என்கின்றனர்.
அவற்றை பார்ப்போம்…

முந்திரி

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரியில் 70 சதவீதம் மெக்னீசியமும் உள்ளது. இது உடலில் கொழுப்பு கார்போஹைட்ரேட் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். இதன் காரணமாக உடல்எடை அதிகரிக்காது. தினமும் உணவுடன் முந்திரியை சேர்த்துக் கொள்வது உடல் எடை இழப்புக்கு சாதகமாக இருக்கும்.

பாதாம்

பாதாமில் கலோரிகள் மிகக்குறைவு. பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. நாள்தோறும் ஐந்து முதல் ஏழு பாதாம் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டிஆக்சிடெண்டுகள் உள்பட பல நன்மைகளைப் பெறலாம். பாதாம் கொலஸ்ட்ராலையும் சீராக்கும்.

உலர் பேரீ‘ச்சை

உலர் பேரிட்சை பழமும் உடல் எடையை குறைப்பதற்கு உதவி புரியும். இதில் இருக்கும் நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்க செய்யும் திறன்
கொண்து. பேரீச்சைப் பழத்தில் வைட்டமின் பி5 உள்ளது. இதுவும் உடலுக்கு ஆற்றலை அளிக்கக்கூடியது. யோகா அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க வித்திடும்.

பிஸ்தா

பிஸ்தாவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை சுவையாக இருப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன. குறிப்பாக உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன் செரிமானத்திற்கும் உதவிபுரிகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிஸ்தா சாப்பிட்ட பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதன் காரணமாக மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்குள் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. நொறுக்குத்தீனி வகைகளிடம் இருந்து விலகி இருக்க வைத்துவிடும்.

வால்நட்

இதில் உள்ளடங்கி இருக்கும் ஏ.எல்.ஏ. என்னும் என்சைம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவும். அதே நேரத்தில் செரிமானத்தையும் மேம்படுத்தும். வால்நெட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆல்பா-லினோலெனிக் அமிலம் மற்றும் நல்ல கொழுப்பும் நிறைந்துள்ளன. அவை உடலில் கொழுப்பை குறைக்க உதவிபுரியும்.

தொகுப்பு: ரிஷி

The post உடல் எடையைப் பராமரிக்க உதவும் உலர் பழங்கள்! appeared first on Dinakaran.

Tags : Dr. Kumkum ,Dinakaran ,
× RELATED அழகான குழந்தைப் பேறுக்கு அமைய வேண்டிய பொருத்தம்