×
Saravana Stores

திருப்பதியில் பரபரப்பு ஏழுமலையான் கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்கள்

திருமலை: ஏழுமலையான் கோயில் மீது 2 ஹெலிகாப்டர்கள் பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி பலகோடி இந்துக்களின் புனிதமாக கருதப்படும் ஏழுமலையான் கோயில் உள்ள திருமலை மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் விமான போக்குவரத்து, உள்துறை அமைச்சகத்திற்கும், ராணுவ அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் ஏழுமலையான் கோயில் மேற்புறமாக நேற்றுமுன்தினம் காலை 2 ஹெலிகாப்டர்கள் பறந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே ஹெலிகாப்டர்களையும் திசை மாற்றி செல்ல உத்தரவிட தேவஸ்தான அதிகாரிகள் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு கேட்டுக் கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பதியில் பரபரப்பு ஏழுமலையான் கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Etumalayan temple ,Tirupati ,Tirumala ,Yehumalayan temple ,Devasthanam ,Seven Malayan Temple ,Hindus ,
× RELATED ஏழுமலையான் கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு