மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு 184 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது.
இதனால், கல்லாறு ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பியது. இந்நிலையில், தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், நிலச்சரிவு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும், நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஆக.6ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்துள்ளது.
The post கனமழை, மண்சரிவு ஊட்டி மலை ரயில் ஆக.6 வரை ரத்து appeared first on Dinakaran.