×

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை பணி மும்முரம்: நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் கோடை அறுவடை பணி துவங்கியுள்ளதால் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு, புதுப்பட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, பிளவக்கல் அணை, நெடுங்குளம், சேதுநாராயணபுரம், மகாராஜபுரம், மாத்தூர், ரெங்கபாளையம், சுந்தரபாண்டியம், கோட்டையூர் இலந்தைகுளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெல் அறுவடை பணி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

எனவே வத்திராயிருப்பு, ராமசாமியாபுரம், கான்சாபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்கள் திறந்து விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை பணி மும்முரம்: நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vadrayiru ,Vathirairipu ,Vathrairipu ,Dinakaran ,
× RELATED வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி