×

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அடுத்த ஆண்டிற்கான (2026) புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி நடந்து வந்தது. ஜூலை 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில்,‘2026ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது,’என்று கூறப்பட்டுள்ளது.

The post ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indian Hajj Association… ,Hajj ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...