×

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருளுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருளுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமுல்படுத்தியது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குட்கா, புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மே 23-ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இப் புகையிலைப் பொருள்களுக்கான தடை 2025 மே 23 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருளுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...