×

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல இருந்த விமானம் 2 மணிநேரம் தாமதம்

சென்னை: மோசமான வானிலை காரணமாக, தமிழ்நாடு ஆளுநர் டெல்லி செல்ல வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதமானது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 4.55 மணிக்கு ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது. இந்த விமானம், வழக்கமாக டெல்லியில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு, சென்னை வந்துவிட்டு, பின்பு சென்னையில் இருந்து கோவை சென்று, மீண்டும் கோவையிலிருந்து புறப்பட்டு, மாலை 4.10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும். இந்த விமானம் தான், மாலை 4.55 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக, ஏர்இந்தியா விமானம் பிற்பகல் 12.40 மணிக்கு சென்னை வர வேண்டியது தாமதமாக வந்து கோவை சென்றது.

எனவே அந்த விமானம் கோவையில் இருந்து சென்னைக்கு மாலை 5.30 மணிக்குதான் வந்தது. இதையடுத்து, இந்த விமானம் மாலை 4.55 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட வேண்டும். ஆனால் தாமதமாக, மாலை 6.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் தாமதம் என்ற தகவல், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே அவர், விமான நிலையத்திற்கு வராமல், கிண்டி கவர்னர் மாளிகையிலேயே காத்திருந்தார். அதன்பின்பு மாலை 6 மணிக்கு மேல் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தார். அதன் பின்பு ஆளுநர் ரவி, டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் 2 மணி நேரம் தாமதமாக மாலை 6.55 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல இருந்த விமானம் 2 மணிநேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Delhi ,CHENNAI ,Tamil Nadu ,Governor ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...