×

ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 8.05 மணியளவில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீரென்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். ஆளுநர் ரவியின் ஒருநாள் திடீர் டெல்லி பயணம் குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் டெல்லியில் இருந்து வந்த அழைப்பின் பேரில், அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவி தனது ஒருநாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

The post ஆளுநர் திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Delhi ,Chennai ,Tamil Nadu ,R.N. Ravi ,Air India ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு