×

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

புதுடெல்லி: மக்களவை எம்பி. ஆனது முதல் ராகுல் காந்தி டெல்லி, துக்ளக் லேன் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவதூறு வழக்கில் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் அந்த வீட்டை காலி செய்த ராகுல்,10, ஜன்பத் சாலையில் வசிக்கும் தாயார் சோனியா காந்தியுடன் வசித்து வந்தார். தகுதி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், வேறு வீட்டிற்கு ராகுல் மாறவில்லை. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவி என்பதால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் அரசு பங்களாவை போல் அவருக்கும் பங்களா ஒதுக்கப்படும். இந்த நிலையில் டெல்லி 5, சுனேரிபாக் சாலையில் உள்ள பங்களாவை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. அந்த வீட்டிற்கு பொருட்களை மாற்றும் பணி துவங்கி உள்ளது. நாடாளுமன்ற மழைகால கூட்ட தொடருக்கு முன் அவர் அந்த வீட்டில் குடியேறுகிறார்.

 

The post எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,New Delhi ,Tughlaq Lane Road ,Delhi ,Lok Sabha ,Rahul ,Sonia Gandhi ,10, Janpath Road… ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...