×

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் கின்னஸ் சாதனை

கும்மிடிப்பூண்டி: அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 501 மாணவர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் கின்னஸ் சாதனை படைத்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை உள்ளது. இங்குள்ள, தனியார் பள்ளி வளாகத்தில் முத்துராமலிங்கம் சிலம்ப கலைக்கூடம் மற்றும் ராமமூர்த்தி சிலம்ப கலைக்கூடம் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் மாணவர்கள் சிலம்பம் சுற்றி நோபல் கின்னஸ் சாதனை நிகழ்வு நோற்று காலை நடத்தினர். இந்நிகழ்ச்சியில், சிலம்பாட்ட கழக தலைவர் பெத்திகுப்பம் ரமேஷ் தலைமை தாங்கினார். பெத்திகுப்பம் ஊராட்சி துணை தலைவர் குணசேகரன், வார்டு உறுப்பினர் லோகு, சமூக ஆர்வலர் வெங்கடேசன் சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் கண்ணன், முருகானந்தம் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம், செங்குன்றம், பெரியபாளையம், பொன்னேரி, மாதர் பாக்கம், தர்காஸ் கண்டிகை, சோம்பட்டு, கவரப்பேட்டை, தேர்வழி, மெதூர், ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, ரெட்டம்பேடு, பெத்தகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனர். இதில், சுமார் 501 மாணவர்கள் இரண்டு கைகளில் சுற்றியபடி ஒரு மணி நேரம் சிலம்பாட்டம் செய்து நோபல் கின்னஸ் சாதனை படைத்தனர். இதில், வெற்றி பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

The post அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் கின்னஸ் சாதனை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...