×

அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!!

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. B.Ed தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுநிலை பட்டம், BEd தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,School Management Committee ,Dinakaran ,
× RELATED பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக...