×

அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு போக்குவரத்து விழிப்புணர்வு

திருச்செங்கோடு : திருச்செங்கோடு டவுன் காவல் நிலையம் சார்பில், அரசு உதவிபெறும் எம்டிவி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். எஸ்ஐ சேகரன், எஸ்எஸ்ஐ புஷ்பா, போக்குவரத்து எஸ்எஸ்ஐ சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எங்கேயாவது போதைப்பொருள் விற்பது தெரியவந்தால் மாணவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடப்பதன் மூலம் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

இளைய சமூகத்தினர் தான் அத்தகைய விழிப்புணர்வை வீட்டில் உள்ளவர்களுக்கும், சமூகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படுத்த முடியும் என எடுத்துக்கூறினர். நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு போக்குவரத்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Drug Abolition ,Awareness ,for Public School ,Trichengode ,Trichenkou Town Police Station ,MTV ,Shivachidambaram ,SI Sekaran ,Drug Abolition Traffic Awareness for Government School Students ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்