×

தங்கம் விலையில் திடீர் சரிவு சவரனுக்கு ரூ.296 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ரூ.296 குறைந்தது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், சில தினங்களுக்கு பிறகு குறைவது என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் பெயரளவுக்கு என்ற அளவில் தான் இருந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த 5ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.46,200க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்து வந்தது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,742க்கும், சவரன் ரூ.45,936க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று கிராமுக்கு ரூ.37 குறைந்து ஒரு கிராம் ரூ.5,705க்கும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ஒரு சவரன் ரூ.45,640க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை சற்று குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

The post தங்கம் விலையில் திடீர் சரிவு சவரனுக்கு ரூ.296 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Sawaran ,CHENNAI ,Savaran ,sawan ,Dinakaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...