×

நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 387 டன் தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கிகள் : 2000க்கு பின் முதன்முறையாக தங்கம் வாங்குவது அதிகரிப்பு!!

மும்பை : நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் உலகம் முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கிகள் 387 டன் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்திருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் அதிகரித்து வருவதால் பொருளாதார மந்தநிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ரிசர்வ் வங்கிகள் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கிகள் கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் 387 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கிகள் வாங்கி உள்ளன.

கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக இந்த அளவு தங்கம் வாங்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல, உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை 2046 டன்னனாக அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான சீன கரன்சியின் மதிப்பு குறைந்து வருவதை அடுத்து சீனா அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகிறது. போர் பதற்றம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளன.

The post நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 387 டன் தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கிகள் : 2000க்கு பின் முதன்முறையாக தங்கம் வாங்குவது அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Reserve Banks ,Mumbai ,Dinakaran ,
× RELATED துப்பாக்கி தவறுதலாக சுட்டு இந்தி நடிகர் கோவிந்தா காயம்!!