×

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தை, சகோதரன் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை பூங்காவனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (35), தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜான்சிமேரி. இருவரும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது 3 குழந்தைகளையும் ஸ்டீபன்ராஜின் மனைவி ஜான்சிமேரி தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உறவினர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி தனது 2வது மகளை மனைவியிடம் இருந்து பிரித்து தன்னுடன் அழைத்து வந்து விட்டார் ஸ்டீபன் ராஜ். பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்க வைக்க, தற்போது 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் சகோதர, சகோதரியை பார்க்க வேண்டும் என்று தந்தை ஸ்டீபன்ராஜிடம் மகள் தெரிவிக்க அவரை உறவினருடன் தண்டையார்பேட்டையில் உள்ள பிரிந்து சென்ற தனது மனைவியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ஜான்சி மேரி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது மகளை கணவன் ஸ்டீபன் ராஜ், அவரது அண்ணன் மகன் திலீப்குமார் (19) ஆகிய இருவரும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார். மேலும் மகளை ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த புகாரின்பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன் ராஜ் மற்றும் அவரது அண்ணன் மகன் திலீப்குமார் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தை, சகோதரன் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Stephen Raj ,Parkavanapuram ,Kalatippet ,Jansimeri ,Thandaiyarpet ,
× RELATED போக்குவரத்து போலீசார் நடவடிக்கை...