×

கேலோ இந்தியா போட்டிகளை பார்வையிட பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி சீட்டை பெறலாம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகளை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் TNSPORTS என்ற செயலி அல்லது http://SDAT.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டிக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 தமிழ்நாடு போட்டிகளை பார்வையாளர்கள் நேரில் காண்பதற்கு பிரத்யேக அனுமதி சீட்டுகளை வழங்க தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sports) இடம்பெற உள்ளது.

இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும் மற்றும் https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் போட்டி நடைபெறும் மாவட்டம். விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினை அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும்.

The post கேலோ இந்தியா போட்டிகளை பார்வையிட பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி சீட்டை பெறலாம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Galo India Games ,Tamil Nadu Sports Development Authority ,Chennai ,Tamil Nadu ,TNSPORTS ,Galo India ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டியை தேதி மாற்றி நடத்தி குளறுபடி: கலெக்டர் அலுவலகம் முற்றுகை