×

ககன்யான் திட்டத்தின் எஞ்சினின் 4ம் கட்ட சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

நெல்லை: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 130 வினாடிகள் நடைபெற்ற எஸ்.எம்.எஸ்.டி.எம் மாடுல் என்ஜினின் 4ம் கட்ட சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே உள்ள காவல்கிணறு கிராமத்தில் மகேந்திரகிரி மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் மகேந்திரகி இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் என்ஜின், விகாஸ் என்ஜின் மற்றும் பி.எஸ்.4 என்ஜின் போன்றவற்றைத் தயாரித்து பரிசோதிக்கிறார்கள்.

மேலும், இந்த மையத்திலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் இஞ்சின்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்தின் எஞ்சினின் 4ம் கட்ட சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SMSDM என்ற மாடலிங் எஞ்சினின் 4ம் கட்ட சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ககன்யான் திட்டத்தின் எஞ்சினின் 4ம் கட்ட சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Gaganyaan ,ISRO ,Nellai ,Nellai Mahendragiri ,ISRO center ,Mahendragiri… ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...