×

ஸ்ரீநகரில் ஜி 20 மாநாடு இன்று துவக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜி 20 மாநாடு தொடர்பான சுற்றுலா கூட்டம் இன்று முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது. இதில் 60 நாடுகளின் பிரதிநிதிகள், 20 வெளிநாட்டு நிருபர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டம் ஷெரீ இ காஷ்மீர் சர்வதேச கூட்டரங்கத்தில் நடக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன் முதலாக நடக்கும் சர்வதேச கூட்டம் இது. இதையொட்டி, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக லால் சவுக்கில் பாதுகாப்புப் படையினர் ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர் . போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரஜோரியில் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு சர்வதேச எல்லைக்கு அருகில் செனாப் ஆற்றில், எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஸ்ரீநகரில் ஜி 20 மாநாடு இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : G20 Conference ,Srinagar ,Srinagar, Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான...