×

பியூஜியாமா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

பியூஜியாமா நிறுவனம் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் துவக்க விலையாக சுமார் ரூ.49,499 எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.99,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், குறைந்த வேக ஸ்கூட்டர்களாக, ஸ்பெக்ட்ரா புரோ, ஸ்பெக்ட்ரா, வெஸ்பார், தண்டர் ஆகியவையும், அதிவேக ஸ்கூட்டராக ஓசோன் பிளஸ் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரா ஸ்கூட்டரில் 250 வாட் பிஎல்டிசி மோட்டார் , 1.56 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி இடம்பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரம் ஆகும். ஸ்பெக்ட்ரா புரோவில், ஸ்பெக்ட்ராவில் உள்ள மோட்டார்தான் இடம் பெற்றுள்ளது. 1.34 கி.லோ வாட் அவர் லித்தியம் பேட்டரி , ஜெஎம் ஹப் மோட்டார் இடம் பெற்றுள்ளது.

வெஸ்பார், தண்டர்: ஸ்பெக்ட்ரா புரோவில் உள்ள ஜெஎம் ஹப் மோட்டார் இவற்றில் இடம்பெற்றுள்ளன. 3 கியர்கள் மற்றும் ரிப்பேர் பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட 4 ஸ்கூட்டர்களும் அதிகபட்சமாக மணிக்கு 25 கி.மீ தூரம் வரை தான் செல்லும். எனவே, இவற்றை பயன்படுத்த ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 80 முதல் 90 கி.மீ தூரம் வரை செல்லும்.

ஓசோன் பிளஸ்: இதில் 1600 வாட் பிஎல்டிசி மோட்டார், 60 வோல்ட், 42 ஏஎச் லித்தியன் அயன் பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் வரை ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 140 கி.மீ தூரம் வரை செல்லும். மணிக்கு 70 கி.மீ வேகம் வரை செல்லலாம். விற்பனைக்குப் பிறகு முதல் 3 சர்வீஸ்கள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

The post பியூஜியாமா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Fujiama Electric ,Fujiama ,Dinakaran ,
× RELATED திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்