×

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ558 கோடி ரொக்கம், இலவசப்பொருட்கள் பறிமுதல்


புதுடெல்லி: தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ.558 கோடி மதிப்பிலான ரொக்கம், இலவசப்பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனைதொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ.558கோடி மதிப்பிலான ரொக்கம், தேர்தல் இலவசங்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரூ.280கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையானது கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் 3.5 மடங்கு அதிகமாகும்.

The post மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ558 கோடி ரொக்கம், இலவசப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Maharashtra, Jharkhand ,New Delhi ,Maharashtra ,Jharkhand ,Election Commission ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான...