×
Saravana Stores

செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.62 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1,62,712 கோடி வசூல் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.47 லட்சம் கோடி வசூல் ஆனது. இத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும். கடந்த மாத வசூலில் மத்திய ஜிஎஸ்டி ரூ.29,818 கோடி ,மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடி அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில், பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலானது ரூ.41,145 கோடியஆகம். இது போல் செஸ்வரியாக ரூ.11,613 கோடி வசூலானது. இதில் இறக்குமதி மூலம் வசூலான ரூ.881 கோடி அடங்கும்.

இதில், தமிழகத்தில் வசூலானது ரூ.10,481 கோடி. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் இது ரூ.8,637 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் வசூல் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ரூ.25,127 கோடி (முந்தைய ஆண்டு செப்டம்பரில் ரூ.21,403 கோடி), குஜராத்தில் ரூ.10,129 கோடி (முந்தைய ஆண்டு ரூ.9,020 கோடி), உத்தர பிரதேசத்தில் ரூ.7,844 கோடி (முந்தைய ஆண்டு ரூ.7,004 கோடி) வசூல் ஆகியுள்ளது.

The post செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.62 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,finance ministry ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து...