×

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை: விமான சேவை பாதிப்பு..!

சென்னை: சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாலையில் மழை பெய்து வருகிறது. இன்று காலை கூட கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில், மாலையில் சட்டென வானிலை மாறியது. சிறிது நேரத்தில் கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, அசோக் நகர், கேகே நகர், பம்மல், நங்கநல்லூர், மடிப்பாக்கம், கூடுவாஞ்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் முக்கால் மணிநேரத்துக்கு பின்னர் தரையிறங்கின. சென்னையில் 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து மும்பை, மைசூர், டெல்லி உள்ளிட்ட 11 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் விமானங்கள் தாமதாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

The post சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை: விமான சேவை பாதிப்பு..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?