×

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை: பதிவுத்துறை விளக்கம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் விடுபடாத மனைக்கான ஆவணம் கட்டுமான ஆவணத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆவணப் பதிவு தொடர்பாக பதிவுத்துறை அரசு செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டண உயர்வு என்று தவறாக செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு புறம்பானது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

The post அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை: பதிவுத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Registration Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் 2 அதிகாரிகளை...