×

வேட்டைக்கு சென்ற ஐந்து பேர் கைது: 2 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாட சென்ற 5 பேரை போலீசார் கைது செய்து நாட்டு துப்பாக்கி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் போலீசார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பில்லூர் காப்புக்காடு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கிடமாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்த ஐந்து பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் அனுமதி இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது, மேலும் விசாரணையில் அவர்கள் காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சூசை (45), டொன்போஸ்கோ (23) கிருஸ்துராஜ் (28) ஜான் பீட்டர் (19) ஜான்எடிசன் (22) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேட்டைக்கு சென்ற ஐந்து பேர் கைது: 2 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை