×
Saravana Stores

மீனவர்கள் பிரச்சனை: மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

டெல்லி: அவையை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாக திமுக எம்.பி.க்கள் குற்றச்சாட்டியுள்ளது. தமிழ்நாடு மீனவர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என திமுக எம்.பி.க்கள் குற்றச்சாட்டினர்.

 

The post மீனவர்கள் பிரச்சனை: மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Lok Sabha ,Delhi ,Speaker ,House ,MPs ,Tamil Nadu ,Sri Lankan Navy ,
× RELATED மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்