×

நாட்டிலேயே முதன்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்

மும்பை: இந்தியாவிலேயே முதன்முறையாக மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் பொருத்தப்பட்டுள்ளது. மும்பை – பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் தனியார் வங்கியால் அளிக்கப்பட்ட ஏடிஎம் பொருத்தப்பட்டு, அதில் பணம் எடுத்து சோதிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பெட்டியின் பின்புறத்தில் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால் மக்கள் எளிதில் ஏடிஎம்மை அணுக முடியும். இந்த சோதனை வெற்றி பெற்றதையடுத்து இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏடிஎம் பொருத்தப்படும்” என தெரிவித்துள்ளனர்.

The post நாட்டிலேயே முதன்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,India ,Express ,PANCHAWADI EXPRESS TRAIN ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...