சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை அரசு வெளியிட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 7.3.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பிரிவு தமிழ்நாட்டு இளைஞர்கள், ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக யு.பி.எஸ்.சி. முதல் நிலைத் தேர்வு 2026க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை வரும் 26ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1,000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.இந்நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, மதுரை, கோவையில் பயிற்சி மையங்களை தேர்வு செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி தேர்வுகள், ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்ைக எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களை தேர்வு செய்ய டெண்டர்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
