- சென்னை, மதுரை
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், எச்.சி.எல்
- நான் முல்வன் திட்டம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், எச்.சில்.எல். நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்வி தேர்வு முகாமை நடத்தவுள்ளது. இதற்கான தேர்வு, சென்னை மற்றும் மதுரையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கோயம்புத்தூரில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
2023 அல்லது 2024ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, கணிதம், வணிகக் கணிதம் ஆகிய பாடத்தில் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் https://registrations.hcltechbee.com எனும் இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். வெற்றிகரமாக ஒருவருட கால பயிற்சியை முடிப்பவர்களுக்கு எச்.சி.எல்.டெக் நிறுவனத்தில் நிரந்தர வேலை மற்றும் மேற்படிப்பை தொடங்குவதற்கான வாய்ப்பை அந்த நிறுவனமே வழங்குகிறது.
பயிற்சியின்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 10 ஆயிரத்தை எச்.சி.எல். நிறுவனமே வழங்குகிறது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி கட்டணத்தின் ஒரு பகுதியை தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்குகிறது. கூடுதல் விவரங்களை 96000 56348, 89395 79849 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் .
The post நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி தேர்வு முகாம்: சென்னை, மதுரையில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.