×

தோல்வி அச்சத்தில் பழைய நண்பர்களை தேடிச் சென்று கூட்டணி அமைக்க பாஜக முயற்சி: காங்கிரஸ் தலைவர் கார்கே ட்வீட்

டெல்லி: 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் பாஜகவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது
தோல்வி அச்சத்தில் பழைய நண்பர்களை தேடிச் சென்று கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்வீட் செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23ம் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதனைத் தொடர்ந்து தற்போது மொத்தம் 26 கட்சிகள் பெங்களூரில் திரண்டுள்ளன. மேலும் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தோல்வி அச்சத்தில் பழைய நண்பர்களை தேடிச் சென்று கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கிறது என தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது’

“பெங்களூருவில் 26 கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாங்கள் 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக தனித்து 303 இடங்களைப் பெறவில்லை. அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து பின்னர் அவற்றை நிராகரித்தது.

பாஜக தலைவரும் அவர்களின் தலைவர்களும் தங்கள் பழைய கூட்டாளிகளுடன் ஒட்டுப்போட மாநிலம் விட்டு மாநிலம் ஓடுகிறார்கள். இங்கு காணும் ஒற்றுமை அடுத்த வருடத்தில் தோல்வியையே விளைவித்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மாறி வருகிறது. இந்த சந்திப்பில் எங்களின் நோக்கம் நமக்கான அதிகாரத்தை பெறுவது அல்ல. இது ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்பதாகும். இந்தியாவை மீண்டும் முன்னேற்றம், நலன் மற்றும் உண்மையான ஜனநாயகப் பாதைக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்போம்” என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

The post தோல்வி அச்சத்தில் பழைய நண்பர்களை தேடிச் சென்று கூட்டணி அமைக்க பாஜக முயற்சி: காங்கிரஸ் தலைவர் கார்கே ட்வீட் appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Kharge ,Delhi ,
× RELATED பாஜக ஆட்சியில் உற்பத்தி துறையின்...