×

போலி ஆவணம் தயாரித்து ₹21 கோடி நிலம் மோசடி: 3 சென்னை ஆசாமிகள் கைது

திருப்பூர்: போலி ஆவணம் தயாரித்து திருப்பூர் தொழிலதிபரிடம் ரூ.21 கோடி நிலம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் திருப்பூர் ஊத்துக்குளி அருகே 24 ஏக்கர் நிலத்தை சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்கிற சண்முக சுந்தரத்திடம் (71) கடந்த ஆண்டு ரூ.21 கோடிக்கு வாங்கினார். அதன்பிறகு நில ஆவணங்களை பார்த்தபோது, அவை வேறு நபர் பெயரில் இருப்பதும், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். அதன்பிறகு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சென்னை மீனம்பாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், சென்னை மாதம்பாக்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (39), ரங்கராஜ் (41) ஆகிய 3 பேரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post போலி ஆவணம் தயாரித்து ₹21 கோடி நிலம் மோசடி: 3 சென்னை ஆசாமிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Asamis ,Tiruppur ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...