×

10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

வந்தவாசி : வந்தவாசியில் 10ம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் காதர்ஜெண்டா தெருவில் உள்ள கிளினிக்கில் மூலம் மற்றும் பவுத்திரம் நோய்க்கு அறுவை சிகிச்சையை போலி மருத்துவர் ஒருவர் செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன், வந்தவாசி தெற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஏ.கே.ராய் என்பவர் மூலம் மற்றும் பவுத்திரம் நோய்க்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ அலுவலர், அங்கிருந்து சிரஞ்சு மற்றும் மருந்து வகைகளை கைப்பற்றினர்.தொடர்ந்து, வந்தவாசி தெற்கு போலீசில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து போலி டாக்டர் ஏ.கே.ராயை கைது செய்தனர். பின்னர், அவரை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Vandwasi ,Wantwasi ,Katharzenda Street ,Thiruvannamalai District ,Vandavasi Town ,
× RELATED தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை..!!