- பி.ஜே.பி கூட்டணி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பதாலி மக்கள் கட்சி
- பாஜக
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பா.ம.க.
- தின மலர்
சென்னை: பாமகவின் தொடர் தோல்வி காரணமாக அக்கட்சி மாநில அந்தஸ்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்று நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அக்கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார். அதன்படி, தேர்தல் முடிவில் ஒட்டுமொத்தமாக அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி, 10 தொகுதிகளிலும் 18.79 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றனர். குறிப்பாக, 6 தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காமல் போனது. இதன் காரணமாக பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது.
குறிப்பாக, இந்த தேர்தலில் 4.23% வாக்குமட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது. தமிழகத்தில் வடமாவட்டத்தை குறித்து வைத்து கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை 7 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 2004ம் ஆண்டு நடந்த 14வது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இதன் காரணமாக அப்போது அக்கட்சியின் வாக்கு சதவீதம் 6.71 ஆக இருந்தது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்வியை மட்டுமே பாமக சந்தித்து வருகின்றன. இதேபோல், இம்முறை நடந்த தேர்தலிலும் 8 சதவீதத்தை எட்ட முடியாமலும், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சோதனை மேல் சோதனை; தொடர் தோல்வியால் அங்கீகாரம் இழந்த பாமக: பாஜ கூட்டணியில் 6 தொகுதிகளில் டெபாசிட் காலி appeared first on Dinakaran.