×

கோஷ்டி மோதலில் கல்வீச்சு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பண்ணூர், சூசையப்பர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (54). இவருக்குச் சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் சவுடு மண்ணை எடுத்துவந்து கொட்ட முயற்சி செய்தார். இதனைக் கண்ட ஜோஸ்பின் தனக்கு சொந்தமான இடத்தில் ஏன் மண்ணை கொட்டுகிறீர்கள் என கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மைக்கேல், தனது நண்பர்களான சேகர், ஜெயராஜ், சின்னா ஆகியோருடன் சேர்ந்து ஜோஸ்பினை ஜல்லிக்கற்களால் தாக்கியுள்ளார். பதிலுக்கு ஜோஸ்பின் தன் உறவினர்களான ஆரோக்கியசாமி உட்பட 3 பேருடன் சேர்ந்து மைக்கேல் தரப்பினரை கையாலும், கல்லாலும் தாக்கியுள்ளார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் அளித்தனர். எஸ்ஐ சக்திவேல் இருதரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

The post கோஷ்டி மோதலில் கல்வீச்சு: 8 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Jospin ,Susaiyappa Periya Street, Pannur ,Kadambathur Union ,Michael ,
× RELATED மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு