×

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் நீட்டிப்பு: ஆளுநர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் பதவிக்காலத்தை 2024ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மாநாகராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம். இது ஒரு சுதந்திரமான தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சிறப்பாக நடத்தி முடித்தார். இவரது பதவி காலம் இந்த மாத இறுதியோடு முடிவடைய உள்ளது.

இந்நிலையில் பழனிகுமாரின் பதவி காலத்தை வரும் 2024ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி வரை நீட்டித்து தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில், அந்த பதவி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளதால் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் நீட்டிப்பு: ஆளுநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu State Election Commission ,Chennai ,Tamil Nadu State Election Governor ,Palanickumar ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...