×

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 4 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. வழக்கம் போல இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு தேவையாக மூலப்பொருள் தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள 8 அறைகளும் வெடித்து சிதறி தடைமட்டமாகியது.

பட்டாசு ஆலையில் இருந்து 5 கி.மீ சுற்றளவிற்கு இந்த வெடிசத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்த ஆத்தூர் சிவகாசி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மேலும் 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன், சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Kamal Kumar ,Virudhunagar district ,Chinna Kamanpatti ,Sattur ,Dinakaran ,
× RELATED கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு...