×
Saravana Stores

தாமாக முன்வருபவர்களை திருமலையில் மதம் மாற்றி ஏழுமலையான் தரிசனம்: சனாதன தர்ம பிரசார மாநாட்டில் தீர்மானம்

திருமலை: பிற மதத்தினர் தாமாக முன்வந்து இந்துவாக மாறினால் திருமலையில் மதம் மாற்றி ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்படும் என சனாதன தர்ம பிரசார மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் சனாதன தர்ம பிரசார 3 நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 62 மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மதத்தை நம்பும் பிற மதத்தினருக்காக திருமலையில் சிறப்பு மையம் ஏற்பாடு செய்யப்படும். இங்கு பிற மதத்தினர் தாமாக முன்வந்து இந்துவாக மாறினால், திருமலையில் புனித நீராட வைத்து அவர்களை மதம் மாற்றி ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்படும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் புராணங்கள் இந்து மதத்தை பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக, புராணங்கள் தெரியப்படுத்தவும் பரவுவதற்கு திறமையான புராண சொற்பொழிவாளர்களாக பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில சாதிகள் மற்றும் சாதிகள் மீது சிலரின் பாரபட்சமான அணுகுமுறையே இந்து சமுதாயம் எப்போதும் பலவீனமாக இருப்பதற்குக் காரணம். அதனால், சாதிகள் இந்து சமுதாயத்திலிருந்து விலகிச் செல்கின்றன. அனைவரையும் உள்ளடக்கி சனாதன தர்மம் அனைவருக்கும் சொந்தமானது என்று கூற முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் மதமாற்றத்தைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மாநாடு முடிவு செய்தது. இவ்வாறு அவர் ேபசினார்.

 

The post தாமாக முன்வருபவர்களை திருமலையில் மதம் மாற்றி ஏழுமலையான் தரிசனம்: சனாதன தர்ம பிரசார மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Sanathana Dharma Presa Conference ,Thirumalai ,Sanatana Dharma Prasara Conference ,Tirumala ,Yumalai ,Thirumalaya ,
× RELATED திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்