×

அதிமுக-பாஜ கூட்டணி உறுதியான பின்னர் இபிஎஸ்-நயினார் நாகேந்திரன் முதல் முறையாக சந்திப்பு


சென்னை: அதிமுக-பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக இபிஎஸ்- நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று ேநரில் சந்தித்து பேசினர். தமிழக சட்டப் பேரவையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதையொட்டி சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலை முதல் சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் வரத் தொடங்கினர். பேரவை தொடங்குவதற்கு முன்னதாக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அறையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனியாக சந்தித்து பேசினார்.

அதிமுக – பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகும், நயினார் நாகேந்திரன் தமிழக பாஜ தலைவராக பொறுப்பேற்ற பிறகும் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமியை முதல் முறையாக சந்தித்து ேபசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, தாளவாய் சுந்தரம், பாஜ எம்எல்ஏ காந்தி ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அதிமுக – பாஜ கூட்டணியின் இணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான அடித்தளமாகவும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக-பாஜ கூட்டணி உறுதியான பின்னர் இபிஎஸ்-நயினார் நாகேந்திரன் முதல் முறையாக சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : EPS- ,Nayinar Nagendran ,Atamug-Baja ,Chennai ,EPS-Nayinar ,Nagendran ,Jenar ,Tamil Nadu Legislative Council ,EPS ,Nayinar ,Dinakaran ,
× RELATED சென்னை பனையூரில் தவெக தலைமை...