கேன்டர்பரி: இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 20ம் தேதி முதல், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முன்னதாக, இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு எதிராக நேற்று முன்தினம், கேன்டர்பரி நகரில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி துவங்கியது. நேற்று உணவு இடைவேளை வரை இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 533 ரன் குவித்திருந்தது. இந்திய அணி வீரர் கருண் நாயர் அபாரமாக ஆடி, 281 பந்துகளில், ஒரு சிக்சர், 26 பவுண்டரிகளுடன் 204 ரன் குவித்து அவுட்டானார். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.
The post இங்கிலாந்து லயனுடன் டெஸ்ட் இரட்டைச் சதம் விளாசிய கருண் : 500 ரன் கடந்த இந்தியா appeared first on Dinakaran.
