×

பொறியியல் டிப்ளமோ படிப்பு சிறப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம்: தொழில்நுட்ப கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பொறியியல் டிப்ளமோ படிப்புக்கான சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொறியியல் டிப்ளமோ இறுதி செமஸ்டர் தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு ஜூன் 30 முதல் ஜூலை 16 வரையும், செய்முறைத்தேர்வு ஜூலை 17 முதல் 25 வரையும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் https://dipexamstndte.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, சிறப்பு துணை தேர்வின் முடிவுகள் ஜூலை 30ல் வெளியிடப்படும்.

The post பொறியியல் டிப்ளமோ படிப்பு சிறப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம்: தொழில்நுட்ப கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Technical Education ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது