×

ஒழுங்காக பணியாற்றாத ஊழியர்கள் பணி நீக்கம்


அய்ஸால்: ஒழுங்காக பணியாற்றாத ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மிசோரம் முதல்வர் லால்துஹோமா தெரிவித்தார். மிசோரம் முதல்வர் நேற்று கல்விதுறை திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் கூறுகையில்,‘‘ பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சேவைகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தில் தகுதியான மற்றும் திறமை வாய்ந்த ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்வோம். பணிக்கு தகுதியற்றவர்களும், ஒழுங்காக பணியாற்றாதவர்களும் விதிமுறைகளின்படி சேவைகளில் இருந்து வெளியேறுவது நல்லது என்று கருதுகிறோம். திட்டங்களை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் நாங்கள் கடுமையாக இருப்போம்” என்றார்.

The post ஒழுங்காக பணியாற்றாத ஊழியர்கள் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Chief Minister ,Lal Duhoma ,Dinakaran ,
× RELATED ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க...