×

யானைகள் நடமாட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் செல்ல தடை

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் மோயர் பாயின்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, 12 மைல் பாய்ண்ட், பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரியின் கழுகு பார்வை பகுதி, அமைதி பள்ளத்தாக்கு, மதிக்கெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகள் விரும்பி செல்லக்கூடிய இடங்கள் உள்ளன. பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 22ம் தேதி காட்டுயானைகள் நடமாட்டம் இருந்ததால், சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பின்னர் யானை கூட்டம் இடம் பெயர்ந்ததையடுத்து 3 நாட்களுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே இடம் பெயர்ந்த யானை கூட்டம் நேற்று முன்தினம் இரவு மோயர் பாயின்ட் பகுதியில் முகாமிட்டது. இதனால், 12 மைல் சுற்றுலாத்தலமான மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை ஆகிய இடங்களுக்கு செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்தனர்.

The post யானைகள் நடமாட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Elephant movement ,Kodaikanal ,Moir Point ,Pine Forest ,Guna Cave ,Thunaparai ,Mile Point ,Perijam Lake ,Topi Tukum Rock ,Perijam Lake's Eagle Viewing Area ,Valley of Silence ,Mothanetan Oasis ,Forest Department ,Elephant ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்